Thursday, 29 May 2008

கல்லூரி காலங்கள் - பாகம் 1

நான் எம்.பிஏ சேந்து முதல் நாள் . மாணவர்கள் நெறைய பேர் , ஒன்னு ஒன்னா வர ஆரம்பிச்சாங்க .என் பக்கத்துல ஒரு அழுக்கு ஷர்ட் போட்டுக்கிட்டு அப்பாவியா ஒரு பைய்யன் உக்காந்து இருந்தான். நான் பாத்துட்டு ஒரு ஹலோ சொன்னேன் . அவன் , உடனே சிரிச்சிட்டு , மீறு தெலுகுவா அப்படின்னு கேட்டான் , நான் உடனே ,சாரி I am Tamil அப்படின்னு சொன்னேன் . ஓஹோ , அப்புறம் whatish yaar naam ? னு கேட்டான் . உடனே , தமிழ் னு சொன்னேன் . கடுப்பாயிட்டு , என்னையா மொழி கேட்டாலும் தமிழ்னு சொல்ற , பேர கேட்டாலும் தமிழ்னு சொல்லற , என்ன என்னைய கிண்டல் செய்ரியானு கேட்டான் . நானும் உடனே , டேய் , என்னங்கடா இதுக்கு எல்லாம் கொப்புளிகிரிங்கனு , என் ID card எடுத்து காமிச்சேன் .தமிழ்செல்வன் னு படிச்சுட்டு , என்னடா பேரு வச்சுருகானுங்கர மாதிரி , என்னை பாத்து சிரிச்சான் .நமக்கு தான் , திருப்பி கொடுக்கலனா தூக்கம் வரதே !

சரி னு அமைதியா வாய்ப்புக்காக காத்து இருந்தேன் . திடீர்னு ஒரு பரபரப்பு , எங்க தலைமை ஆசிரியை உள்ள தாவி வந்தாங்க . அவங்கள பத்த உடனே , நான் பட்ட கஷ்டம் எல்லாம் மறந்து போச்சு . அப்படி ஒரு அழகு . அந்த பட்டு புடவயில அவங்கள பாக்கும் போது அப்படி மூதேவி மாதிரி இருப்பாங்க . அந்த அம்மா வந்து attendance எடுக்கும் பொது எல்லாரும் அவங்க அவங்க கைய தூக்கி yes madam , yes madam னு சொன்னாங்க . நம்ம பக்கத்து சீட்டு மனவாடு பேரு , 'கொண்டப்பள்ளி சத்யநாராயண செருக்கு' . சொன்ன உடனே , அவன பாத்து ரொம்ப சத்தமா சிரிச்சேன் . அவன் உடனே , ஏன்டா சிரிக்கிரன்னு அரைகுறை இங்கிலிஷ்ல கேட்டான் . உடனே , நான் , ஒண்ணும் இல்லடா உன் பேரு ரொம்ப காமெடியா இருக்குன்னு சொன்னேன் .உடனே அவன் , உனக்கு என்னடா தெரியும் , அது சாமி பேரு னு சொன்னான் , உடனே நான் அப்படியானு கேட்டு , eங்க ஊருல இப்படி ஒரு பேர நாய்க்கு கூட வைக்க மாட்டாங்க , உங்க ஊர்ல சாமிக்கெல்லாம் வைக்குரங்கலானு சொல்லிட்டஉ பக்கத்து பெஞ்சுக்கு தாவிட்டேன்.அவன் ஒரு பார்வை பாத்தான் பாருங்க , அவன் கண்ணுல ஒரு fire தெரிஞ்சது. அன்னைல இருந்து , அவன் என்கூட , ஒரு வார்த்தை பேசுனது இல்ல. அவன் என் பேர் கேட்டு சிரிக்காம இருந்தா , நானும் சும்மா இருந்திருப்பேன் . ஹ்ம்ம் என்ன பண்ணறது!!! .... இன்னும் நெறைய இருக்கு .......

No comments: