I got this from a friend's post . Its very funny . Go ahead , read it and post your comments !
என் தேவதை வாழ்ந்த என் இதயக்கோவில் விற்பனைக்கு உள்ளது. சுமார் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேவதை வாழ்ந்த இந்த கோவில் விற்பனைக்கு வந்துள்ளது, உலகமக்கள் எல்லாம் ஒரே நேரத்தில் ஒன்று கூடி வந்தாலும், அன்போடு ஏற்றுக்கொள்ளும் மனம் கொண்ட இந்த இதயம் தற்போது தனிமை தாழாமல் தற்போது ஏலம் விடப்படுகிறது.இத்தனை நாள் ஒரு தேவதைக்காக மூடிவைக்கப்பட்ட இதன் கதவுகள் இன்று முதல் பொது பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது. குடியிருந்த என் தேவதை, நான் கண்சிமிட்டிய கணத்தில், சொல்லாமல் சென்றதால், பராமரிப்பு இன்றி சுவர் பூச்சுக்கள் உதிர்ந்து என் ரத்தம் கசிய வலி தாளாமல், இதனை விற்க முடிவு செய்துள்ளேன்.இதில் நிரந்தரமாக தங்க விருப்பம் உள்ள கல் தேவதைகளும், அன்பு பிசாசுகளும், காதல் காட்டேரிகளும் என் கோவில் இடிந்து விழும் முன்பு விண்ணப்பிக்கவும். கோவிலின் கட்டுமான விவரம் பின் வருமாறு:அனைவரையும் ஏற்கும் இந்த கோவில், எந்த மதத்தையும் சார்ந்ததில்லை. ஜாதிப்பிரிவினைகள் இல்லாமல் அனைவருக்கும் சம உரிமை எனும் மந்திரம் ஓதப்படும் இதன் கருவறை, கடவுள் மட்டும் கல்லில்லை. அன்புள்ளம் அனைத்தும் இங்கு பூஜிக்கப்படும், வாழும் வரை தீங்கிழைகாத உயிர்களுக்கு அனுமதி உண்டு.வானத்தை தன் கூரையின் கீழ்கொண்ட இதன் கோபுரங்கள் ஒரே கல்லை குடைந்து, நுட்பமாக அமைக்கப்பட்டது. ஒரே ஒரு வாசல் மட்டுமே கொண்டுள்ள இந்த கோவிலில் மூடநம்பிக்கை கொண்டவர்கள் உள்ளே வருவதற்க்கு இடவசதி இல்லை. தேவதை வாழ்ந்த இடம் என்பதால் இங்கு கருணை கடவுளுக்கென தனி அறை உள்ளது.சுமார் 5.6" அடி உயரமும் வலுவான தோற்றமும் கொண்ட கோவிலின் வெளிச்சுவர் எத்தனை போர் யானைகளையும் துரத்தியோடச்செய்யும். ஆனால் இந்த கோவிலின் வாசக்கதவுகள் மட்டும் மெல்லிய பூங்காற்றையும், மழலை சிரிப்பையும் கண்டால் வழிவிட்டு சிரிக்கும். இந்த கோவிலின் கொள்கை மதில்களை இதுவரை எவரும் வென்றதில்லை.வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் செப்டெம்பர் 1984 கட்டிமுடிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை எந்த வித மதுக்கரையான், புகைப்பாய்ச்சல் இன்றி வலுவான மனம் கொண்டுள்ளது. பெண்பாசறை இல்லாமல் தேவதைபாசறை மட்டும் கொண்ட இதன் உள்கட்டமைப்பு அழகிய தோற்றம் கொண்டதாயினும், வெளிபார்வைக்கு கருங்கல்லினாலான கட்டிலென தோற்றமளிக்கும்.சுமார் 17 வருடம் கட்டப்பட்ட இந்த கோவிலில் 8 வருடமாக ஒரு தேவதை மட்டுமே குடியிருந்தது குறிப்பிடதக்கது, தற்போது தனிமைச்சிறையாக இருக்கும் இந்த கோவிலுக்குள் தனியாக குடியிருக்க பயமாக இருப்பதால் இதனை விற்பனை செய்ய முடிவுசெய்தேன்.விருப்பம் உள்ள தேவதைகள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் இன்று, இப்பொழுது, இங்கே. முன்பு தங்கியிருந்த தேவதை கவனிக்க, நீங்கள் செல்லும் போது எனக்கு சொந்தமான நம்பிக்கையையும் தவறி எடுத்து சென்றுவிட்டீர்கள். தயவு செய்து அதனை எனக்கு இந்த முகவரியில் பதிவு செய்யுங்கள், நீங்கள் நலமாக இருப்பதை தெரிவித்தால் போதும் நான் இழந்த்த நம்பிக்கை கிடைத்துவிடும்.கோவில் தற்போது உள்ள இடம் : chennaiவிலை: negotiableஅனுகவேண்டிய முகவரி: anushadhasan@gmail.comஅன்புடன்,அனுஷாதாசன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment